கண்ணுக்குக் கண்ணாகும் கண்ணில் புலப்படாததுஎன்னவென்று ஆராய்ந்து சொல்...?
உயர வளர்ந்தாள் ஒருபிள்ளை பெற்றாள்உடனே இறந்தாள் எவள்...?
ஒளியைக் கொடுக்கும் ஒளியாக மாறும்அதிசய உற்பத்தி யாது...?
பிள்ளைப் பிறந்ததும் தாயோ உயிர்விடுவாள்நல்லாள் அவள்பெயர் கூறு...?
உயரப் பறந்திடும் ஊன்றுக்கோல் கொண்டேஉயரத்தில் நிற்குமதைக் கூறு...?
ஒருபக்கப் பல்லினால் ஒன்றைப் பலவாய்ப்பெருகிடச் செய்வது எது...?
என்னை அறுத்தாலோ உன்னை அழவைப்பேன்என்னை அறிந்துநீயும் சொல்...?
என்னைநீ கண்டாலே உன்னையே காட்டிடுவேன்என்னை அறிந்துநீயும் சொல்...?
எந்நேரமும் கொட்டிடும் சத்தமோ கேட்டிடாதுஎன்னவென்று ஆராய்ந்து சொல்...?
நெருப்பில் பிறக்கும் உயரப் பறக்கும்நெருப்பின் படைப்பெது கூறு...?
பார்வைக்கு வெண்நிறம் வாய்க்குள் சிவந்திடும்பாரில் எரிந்தபூ யாது...?
நீரினில் உயிரினைப் பெற்று நிலத்தினில்நீரை இறைப்பவன் யார்...?
தரையினில் முட்டும் விரலினில் ஒட்டும்தலைவியின் ஆபரணம் யாது...?
தலையில் முளைக்கும் தழைகளோ இல்லாகிளைமரம் யாதென்று சொல்...?
கண்ணில் தெரியாப் பொருளைக் கணப்பொழுதில்கண்டிடச் செய்யும் அதெது...?
சிவந்த நிறந்கொண்ட தேங்காய்த் திருவிஅரமெது...? சொல்வாய் விரைந்து...!
சினந்து சிவந்தவன் தானே சிதைந்துதுகளாவான் யாரவன் சொல்...?
சாட்டையால் ஓங்கி அடித்திடச் சத்தமிட்டுஓடியதும் ஆடியதும் யாது...?
குடியிருக்க கூட்டினைக் கட்டிடும் கூட்டைஉடைத்து வெளிவரும் யாது...?
வறியன் படுத்திடும் மஞ்சம் அதனை
மண்ணில் பிறந்திடும் மங்கைக்கு அழகினைத் தந்திடும் என்னவென்று சொல்...?
பூவில் பிறந்திடும் நாவில் இனித்திடும்பூவின் மதுரசம் யாது...?