தரணியெல்லாம் சுற்றிவரும்
தண்ணீர் அருந்தாது
நம்மைச் சுமக்கும்
அது யாது...?
Friday, January 24, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-050
Wednesday, January 22, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-037
அந்தரத்தில் தொங்கும்
அழகான இல்லம்
அதைக் கண்டு நீயும்
என்னிடத்தில் சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-035
எம்மைச் சுமந்திட்டால்
உம்மைச் சுமந்திடுவேன்
எம்மை அறிந்து
நீயும் சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-031
வேண்டுமெனில்
தூக்கி எறிந்திடுவார்
வேண்டாத வேளையில்
காத்திடுவார்
யாது...?
Friday, January 10, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-027
விதையின்றி உண்டாகும்
வேரின்றி தோன்றும்
விரைந்து அதை
என்னவென்று சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-024
காய்வேன் நனைவேன்
மலர்வேன் சுருங்குவேன்
நான் யார்
நவில்வாய் விரைந்து...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-023
வெயிலில் மலர்ந்திடும்
காற்றில் உலர்ந்திடும்
மெய்மீது தோன்றும்
அது எது?
Monday, January 6, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-011
மூன்றெழுத்து கொண்டிருந்தால்
பெண்தான்
முதலெழுத்து நீங்கினால்
பூ
அது யார்...?
Sunday, January 5, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-009
வரிக்குதிரை ஓடிடும்
வாய்ப்பாட்டும் பாடும்
திரிந்தபடி பாடும்
அது யார்...?
Subscribe to:
Posts (Atom)