Monday, July 20, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-200
கையிரண்டை ஆடிடச் செய்திடும் கந்தலைக்
கூடிடச் செய்திடும் யாது?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-199
பொன்னகையால் பூட்டிருக்கும்
சொன்னதைக்
கேட்டதை
உள்ளிழுக்கும்
என்னஅது சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-198
விண்ணைச்
சிரித்திடச் செய்திடும்
கண்ணைப்
பறித்திடச் செய்யும
து யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-197
உயரத்தில் உள்ளவன்
ஊராரின் தாகத்தைத்
தீர்ப்பவன் யாரென்று சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-196
சொறியனைக் கொண்டு
கறிசமைக்கச் சோறு
முழுதும் கசப்பவன் யார்...?
Sunday, July 19, 2020
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-195
தலையில் அடிவாங்கி
கோயில் சிலைவடிக்கும்
கோடி கலைபடைக்கும்
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-194
கரைந்திடும் உப்பல்ல
நீரில் குளிக்கும்
நரனல்ல யாரது சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-193
நெடிலாய்ப் பிறந்து
குறிலாய் வளரும்
அழுகை நிறைந்தவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-192
பருந்தினைக் கண்டால்
மறைவான் நெருப்பினைக்
கண்டால் பயங்கொள்வான் யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-191
நெடிலாய்ப் பிறக்கும்
குறிலாய் வளரும்
எரிந்தே அழுபவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-190
எரித்திடும்
ஆனால்
அதுவோ
எரியாது
என்னவென்று
நீ
அறிந்து சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-189
ஊசியினைப் போட்ட
மருத்துவர் ஊமைபோல்
போகிறார் யாரவர் சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-188
உலகமெல்லாம் சுற்றும்
ஒருத்தரும் காணார்
உலகமெல்லாம் சுற்றும
து யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-187
குருதி
குடித்து வளரும் குருதியோ
இல்லாத
தென்னவென்று சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-186
அயத்தில் விளையா
அகத்தில் விளையும்
எவரும் விரும்பும்பூ
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-185
தினமும் மலரும்
திகைப்பினில் ஆழ்த்தும்
மகளிர் படைப்
பெது
சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-184
வானில் பறந்திடுவான்
வட்டமிட்டு சுற்றிடுவான்
வாலினைக் கொண்ட
அவன் யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-183
முதுகில்
இருப்பது
கூடாம்
அதுவே
முனியம்மாள்
வீடாம்
எது...
?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-182
அடித்து நொறுக்கி
அனலிலே போட்டால்
அழிந்தே மணப்ப
தெது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-181
மண்ணில் பிறந்திடும்
மண்ணையே உண்டிடும்
மண்ணோடு வாழும
வன் யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-180
நீரில் பிறந்திடும்
நீரால் அழிந்திடும்
மேனி வெளுத்தவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-179
நான்கேழு
நாள்வருவேன் நாளொன்றில் நான்மறைவேன்
நான்யார்
விரைந்து நவில்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-178
நடக்க முடியாத
நானோ நிதமும்
நகர்ந்தபடி செல்வேன்
நான் யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-177
சுடாத நெருப்பெடுத்து
சுற்றி அலைவோம்
சுடாத நெருப்ப
து யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-176
சிவப்புநிற பைக்குள்ளே
சில்லறையோ கொட்டிக்
கிடக்கிறது என்னஅது சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-175
சரியாக வைத்தால்
சரியாய் எழுப்பும்
துடிப்பு மிகுந்தவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-174
கோடையில் ஆடிவரும்
வாடையில் ஆடா
த
டங்கி விடும
து யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-173
கையில் தவழ்ந்திடும்
பையில் உறங்கிடும்
கையிருப்
பென்னவென்று சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-172
குருதியில் என்றும்
குளிக்கும் நமது
சுருதியைக்
காக்கும
து
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-171
கறுத்த அரங்கத்தில்
வெண்குருவி ஆடி
கருத்துகளைக் கொட்டு
ம
து
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-170
மண்ணில் பிறந்தவன்
பம்பரமாய் ஓடியவன்
செந்நிறத்தில் காய்ந்தவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-169
வாலினால்
தண்ணீர் குடித்து தலையினில்
பூப்போல
மலர்வ தெது
...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-168
வாயில்லை
வார்த்தைகள் சொல்வான் உயிரில்லை
ஊர்ஊராய்ச் சுற்றுவான்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-167
உலகமெங்கும் செல்வான்
உரியவரைக் காண்பான்
உரைத்தசேதி சொல்வான்
எவன்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-166
வெளியே இருக்கிறது
வெள்ளியரண் உள்ளே
இருக்கிறது தங்கம் அதெது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-165
கண்ணைச் சிமிட்டும்
மணி
ய
டிக்கும் கண்ணீர்
வடிக்கும் அவை
யெ
ன்ன சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-164
ஆடிடச் சட்டை
அணிந்திடும் ஆடிடும்
முன்பே கழற்றிடும் யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-163
நீரினில் நீந்தும்
தரையினில் தாவும்
கார்காலப் பாடகி
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-162
வெண்நிற வீடதற்கு
வாசல் வழியில்லை
வெண்நிற வீடது
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-161
கல்லினில் மோதி
கயத்தினில் நீராடி
புல்லினில் காய்பவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-160
நெடிலாய்ப் பிறந்து
குறிலாய் வளர்ந்தே
அழிவினை ஏற்பவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-159
கற்கும் பொழுதில்
கசப்பது கற்ற
பிற
கோ
இனிப்பது யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-158
பகலினில் பாடும்
இரவில் ஒளிரும்
பயன்மிகு நீர்கருவி
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-157
கடலில் பிறந்திடும்
காற்றில் மிதந்திடும்
கன்னியவள்
பேரென்ன சொல்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-156
இரவில் வருவான்
பகலில் மறைவான்
இரவுக்கு
ராணியவள் யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-155
ஆடி
அசைந்து வருவது கோபத்தில்
பாடியே பொங்குவது
யாது...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-154
வீட்டில் இருப்பவன்
விந்தையாய்ப் பேசுபவன்
வீட்டில் அடைந்தவன்
யார்...?
தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-153
மஞ்சள் உறைக்குள்
மறைந்தவன் மக்களின்
சிந்தை கவர்ந்தவன் யார்...?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)