Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-100


நீலமேனி கொண்டு
நிலமதனைச் சுற்றி
ஓலமிடுவாள்
யாரென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-099


நீலக் கடலில்
மிதக்கிறது வெண்பஞ்சு
நீ அதனைக்
கண்டறிந்துச் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-098


சுமைதனைத் தாங்கும்
உதைகூட வாங்கும்
சுமைதாங்கி
யாரென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-097


நம்மில்
உருவாகும் சித்திரம்
நம்மைத்
தொடர்ந்திடும் சித்திரம்
யாது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-096


தேடாமல் கிட்டுவது
தேடுகின்ற செல்வம்
சேராமல் செய்வது
எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-095


தேய்க்க நுரைக்கும்
அடிக்க வெளுத்திடும்
தேய்தல் அடையும்
அது யாது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-094


திறலோன் உருவாக்கும்
பெட்டி - அது
தானே
திறந்திடும் மூடிடும்
யாது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-093


காலில்லாப் பந்தலைக்
காண விநோதமே
காலில்லாப் பந்தல்
எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-092


வனத்தில் பிறப்பது
வஞ்சியர்
கையால் இறப்பது
எதுவெனச் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-091


காட்டில் இருக்கும்
குடை - அது
வீட்டில் இருக்காது
எதுவெனச் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-090


காலுண்டு
அதுவோ நடக்காது
கண்ணுண்டு
பார்க்காது
எதுவெனச் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-089


கண்டால்
உருவம் உண்டு
கட்டிப் பிடித்திட
பிண்டமது
இல்லாது எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-088


கடித்தால்
கடிபடாதது என்ன...?
பிடித்தால்
பிடிபடாதது என்ன...?
நீ கூறு.




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-087


கண்ணுண்டு காணும்
செவியில்லை கேட்டிடும்
தம்பி சொல்
காலற்றது ஆர்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-086


கண்ணினால் கண்டிடாத
கண்ணை மறைக்கின்ற
நண்பர்கள்
பேரென்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-085


ஒருமுழ மூங்கிலில்
ஒய்யார
ஓசை எழுப்பிடும்
என்னவென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-084


எடுத்துக் கிழித்தால்
நெருப்பே
எடுக்காது இருந்தால்
இருப்பே
எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-083


ஊரெல்லாம்
வம்புதான் செய்திடும்
ஓரறையில்
ஓய்ந்து இருக்கும்
என்ன அது சொல்...?



தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-082


உள்ளதைச் சொல்லிடும்
சொன்னதை
உள்ளமதில் கொண்டிடும்
என்ன அது சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-081


உலர்ந்த
மரக் கொம்பில்
மலர்ந்த மலர் என்ன...?
கண்மணியே
ஆராய்ந்து சொல்.




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-080


உச்சாணிக் கொம்பில்
உரலது கட்டியே
தொங்குவது
என்னவென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-079


உருவம் சிறிய
உழைப்பில் பெரிய
உயிரினத்தின் பேர்
என்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-078


இருள் நிறைந்த வீட்டிலோ
முத்து வரிசை
இதன் பெயரைக்
கண்டு நீயும் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-077


இனிப்பின் எதிரி
இதழின் உவமை
என்னவென்று
ஆராய்ந்து சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-076


அறைகள் அறுநூறு
அத்தனையும் ஓரளவாய்
பெற்றிருக்கும்
வீடு எது சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-075


அடர்ந்த வனத்தின்
நடுவிலொரு பாதை
அதனுடைய
பேரென்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-074


அழதழுது
கண்ணீர் வடித்து
இருளை விழுங்கும்
அதன்
பேரென்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-073


கன்னங்
கரிய பிறப்பவள்
உச்சியில்
மஞ்சள் நிறத்தவள்
யார்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-072


அழகுக்கும் ஆடலுக்கும்
தேவதை
கண்டோர் மயங்கிடும்
பேரழகி
யார்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-071


அரைஅடிப் புல்லில்
இறங்குவான் ஏறுவான்
அர்ப்பனே!
நான்யார் நவில்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-070


அடித்தால் அழுவேன்
பிளந்தால் சிரிப்பேன்
அடியேனை
யாரென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-069


போகும் இடமெல்லாம்
கோடு கிழித்தபடி போகும்
அதன்
பேரென்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-068


தொட்டால் மணக்கும்
குடித்தால் புளிக்கும்
அதை
கற்றவனே
கண்டறிந்து சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-067


சலசலக்கும்
சத்தமது செய்திடும்
வாய்பேச இயலாது
எதுவெனச் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-066


ஏறுவான் இறங்குவான்
வாழ்க்கையின் தத்துவம்
ஓதுவான்
யாரென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-065


விரித்தால்
தனக்குள் அடக்கம்
சுருக்கினால்
நம்முள் அடக்கம்
எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-064


பட்டுக் குடைபோல
பூக்கும்
பறித்திட எட்டாத
பேரழகி
யார்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-063


நூலில்லை ஊசியுண்டு
வாயில்லை பாடிடும்
ஆராய்ந்தே
என்னவென்று சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-062


கண்டிடலாம்
கையால் பிடிக்க முடியாது
கண்டு நீயும்
என்ன அது சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-061


இருந்தால் பறந்தால்
இறந்தால்
இறக்கை மடக்காத
பூச்சி எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-060


தன்னை அழைத்தவனைத்
தானே அழித்திடுவான்
தம்பியவன்
பேரென்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-059


ஓடியாடிக் கத்தும்
பலரின் உடலதைத்
தேடியே குத்தும்
எது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-058


உழைக்க உழைக்க
உடம்பெல்லாம் தோன்றும்
உழைப்பின் வெளிப்பாடு
யாது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-057


நடைக்கோ உவமை
நளனுடைய தூது
அடியேனைக்
கண்டு நீயும் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-056


உப்பினை உண்டே
உறங்காது அலைந்திடும்
உத்தமன்
பேரென்ன சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-055


பகலில் துயிலும்
இரவில் அலறும்
பறவை அதன்
பெயர் யாது...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-054


மணமில்லா மல்லிகை
மாலை மலர்ந்திடும்
மங்கையே
என்ன அது சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-053


மணியடித்தால் சோறிடும்
மாமியார் வீடெது...?
கண்மணியே
கூறு விரைந்து.




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-052


அடிக்காமல் நானோ
அலறித் துடிப்பேன்
அடியேனைக்
கண்டு நீயும் சொல்...?




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-051


பறந்து திரியும்
படுக்கை தலைகீழ்
பறவை
அதன்பெயர் யாது...?