Thursday, August 14, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-300

 



சொல் விளையாட்டுப் புதிர்கள் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-300
 
வருடம் முழுதும் கனியை வழங்கும்
புதுமை படைப்பெது சொல்?
 
தென்னை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-299

 



தமிழ் விடுகதைகள் விடுகதை வினாடி வினா
 
தமிழ் விடுகதைகள்-299
 
காலைக் கடிக்கும் செருப்பன்று காவலது
காத்திடும் நாயன் றதெது?
 
முள்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-298

 



தமிழில் சொல் விளையாட்டு விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-298
 
அடித்த இடத்தில் இருப்பது யாரும்
தினமும் ரசிப்ப தெது?
 
காலண்டர்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-297

 



அறிவுப் புதையல் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-297
 
குடிசையைக் கட்டி முதுகில் சுமக்கும்
வடிவினைக் கொண்டவன் யார்?
 
நத்தை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-296

 



புதிர் விளையாட்டு எளிமையான விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-296
 
ஆற்றைக் கடக்க உதவிடும் அழகிய
வாகனம் யாதென்று சொல்?
 
படகு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




Wednesday, August 13, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-295

 



அறிவுக்கு விருந்தாகும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-295
 
தென்னை மரம்போல் உருவம் திரண்டிருக்கும்
முட்கள் எதற்கெனச் சொல்?
 
ஈச்ச மரம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-294

 



மனதிற்கு உற்சாகம் தரும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-294
 
தாலி சுமந்திடும் மங்கையர் மோதிரமாய்
காலில் அணிவ தெது?
 
மெட்டி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-293

 



மூளைக்கு வேலை தரும் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-293
 
மண்ணில் ஒளிந்திருக்கும் காண அருவருக்கும்
கண்ணில்லாத் தோழன் எவன்?
 
மண்புழு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-292

 



வாய்மொழி இலக்கியம் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-292
 
சேற்றில் புரண்டிடும் வீதியில் சுற்றிடும்
மூக்கறுந்த யானை எது?
 
பன்றி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-291

 



சிந்தனை திறன் வளர்க்கும் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-291
 
கண்ணைக் கவரப் பறந்திடும் வண்ணப்
புடவை உடுத்திடும் யாது?
 
வண்ணத்துப்பூச்சி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




Monday, August 11, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-290

 



பொது அறிவூட்டும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-290
 
மூடாத தொட்டி எடுக்க எடுக்கவோ
நீரூறும் என்னஅது சொல்?
 
கிணறு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-289

 



தமிழ் விடுகதைகள் வினாவும் விடையும்
 
தமிழ் விடுகதைகள்-289
 
அடிமேல் அடிவாங்கி எல்லோர் மனதையும்
சொக்கிடச் செய்பவர் யார்?
 
மிருதங்கம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-288

 



குழந்தைகளுக்கான விடுகதை வினாடி வினா
 
தமிழ் விடுகதைகள்-288
 
பூப்பூவாப் பூத்திருக்கு பூவிலே ஆயிரம்பூ
பூவில் சிறந்தபூ யாது?
 
சிரிப்பு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-287

 



சிந்திக்க வைக்கும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-287
 
ஆட்சியினை மாற்றிடும் கத்தியினும் கூரான
ஆயுதம் என்னவென்று சொல்?
 
எழுதுகோல் (பேனா)
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-286

 



பொது அறிவு புதிர்கள் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-286
 
தாயின் உதட்டில் பிறக்கும் தரணி
முழுதும் சிறக்கும் எது?
 
தாலாட்டு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-285

 



அறிவை வளர்க்கும் பொது அறிவு புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-285
 
அடித்த இடத்தில் இருப்ப தனைவரும்
அன்றாடம் பார்ப்ப தெது?
 
நாட்காட்டி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal